Home உலகம் மாஸ் விமானத்தில் எடுக்கப்பட்ட படத்தை தவறாகப் பயன்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்!

மாஸ் விமானத்தில் எடுக்கப்பட்ட படத்தை தவறாகப் பயன்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்!

411
0
SHARE
Ad

WanPingCoombesகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த போது குடும்பத்துடன் தாங்கள் எடுத்துக் கொண்ட படத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தவறாகப் பயன்படுத்தி விட்டதாக மாஸ்டர் செஃப் யூகே 2014 வெற்றியாளரான கேத்ரின் சின் வான் பிங் கூம்பிஸ் சாடியுள்ளார்.

மாஸ் விமானப் பயணத்தில், தனது கணவர் மற்றும் மகளுடன் படம் எடுத்துக் கொண்ட கேத்ரின், அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால் அவர்கள் எடுத்துக் கொண்ட அந்த படத்தில், அவர்களுக்கு பக்கத்து இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் யாருமே இல்லாமல் காலியாக இருந்தது.

#TamilSchoolmychoice

இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆஸ்திரேலிய பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை, மாஸ் விமானத்தில் பயணிகள் குறைந்துவிட்டார்கள் என்று கூறி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரைக்கு உதவியாக கேத்ரின் தன் குடும்பத்தினருடன் இருக்கும் அந்த படத்தையும் இணைத்துவிட்டது.

இதை அறிந்து கொதித்துப் போய் விட்ட கேத்ரின், மீண்டும் அந்த படத்தை இன்ஸ்டாகிராம் உதவியுடன் நட்பு ஊடகங்களில் பதிவு செய்ததோடு, அதில், “பயணிகள் ஏறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட இந்த படம் சில ஊடகங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விட்டது. விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும். உண்மையில் அன்றைய பயணத்தில் விமானம் முழுவதும் பயணிகள் இருந்தனர்” என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், அரசாங்க விமான நிறுவனமான மாஸ் ஏர்லைன்ஸ் தற்போது இருக்கும் மோசமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நாம் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும். மாறாக அதன் மீது மேலும் மேலும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் கேத்ரின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படம் பதிவு செய்யப்பட்டிருந்த டிவிட்டர் பக்கத்தில், உண்மையில் அவர் கூறியிருந்தது என்னவென்றால், “மாஸ் பயணம் மிகவும் அற்புதமாக, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது. நன்றி” என்று மட்டுமே கூறியிருந்தார்.

ஆனால் ஆஸ்திரேலிய ஊடகம் அந்த படத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மாஸ் மீது களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகின்றது.