Home கலை உலகம் கதாநாயகர்களை மடக்க பிரியாணி விருந்து – ப்ரியா ஆனந்த்!

கதாநாயகர்களை மடக்க பிரியாணி விருந்து – ப்ரியா ஆனந்த்!

617
0
SHARE
Ad

Priya-Anand-1சென்னை, ஏப்ரல் 8 – கதாநாயகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆர்யா மடக்குவதுபோல், கதாநாயகர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்து மடக்க சிறந்த வழி போட்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த்.

தன்னுடன் ஜோடியாக நடிக்கும் நாயகிகளுக்கு பிரியாணி கொடுத்து அசத்துவதில் கைதேர்ந்தவர் ஆர்யா. அந்த பாணியை பிரியா ஆனந்தும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

நடிப்பு, படிப்பு என்று பிஸியாக இருந்துவிட்ட பிரியா ஆனந்துக்கு சமையல் கற்றுக்கொள்ள நேரம் இல்லை. இந்நிலையில் அவருக்கு படப்பிடிப்பில் இருந்து 10 நாள் விடுமுறை கிடைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த விடுமுறையில் வீட்டு சமையல்காரரிடம் சுவையான பிரியாணி தயாரிக்க பயிற்சி எடுக்கிறார். இதுதவிர வட நாட்டு உணவுவகைகள் மற்றும் சைனீஸ் உணவுவகைகளையும் செய்ய கற்கிறார்.

கற்ற கலையை சீக்கிரமே பரிசோதிக்கவும் முடிவு செய்திருக்கிறார். தற்போது நடித்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பட குழுவினருக்கு முதன்முறையாக தன் கையால் சமைத்து பிரியாணி விருந்து தருவதாக கூறி இருக்கிறார் பிரியா ஆனந்த்.

எப்போது பிரியாணி தரப்போறீங்க என்று விமல், சூரி, இயக்குநர் ஆர்.கண்ணன் அவரை நச்சரித்த வண்ணம் இருக்கிறார்களாம். படப்பிடிப்பின் இறுதிநாளில் தருவதாக அவரும் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.