Home நாடு கேலிக் கூத்தாகியுள்ள ராஜா ‘போமோ’வின் மாந்திரீக பூஜை!

கேலிக் கூத்தாகியுள்ள ராஜா ‘போமோ’வின் மாந்திரீக பூஜை!

779
0
SHARE
Ad

raja-bomoh-at-work-300x188கோலாலம்பூர், மார்ச் 13 – விமானம் மாயமானது தொடர்பாக உலக நாடுகளின் கவனம் அனைத்தும் மலேசியாவின் மீது இருக்கும் வேளையில், கேஎல்ஐஏ விமான நிலையத்தில் ‘போமோ’ (shaman) நடத்திய மாந்திரீக பூஜை பெரும் கேலிக் கூத்தாகி விட்டது.

முகநூல் தொடங்கி யூடியூப், டுவிட்டர் வரை அனைத்து நட்பு ஊடகங்களிலும், பலரும் போமோவின் படங்களை பகிர்ந்து, மலேசியாவின் நிலைமையை மேலும் கிழி கிழி என கிழித்து வருகின்றனர்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, போமோவின் செயல்களை பார்ப்பது போல் வெளியாகியிருக்கும் புகைப்படம் தற்போது முகநூலில் பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது.1782057_10152915819764572_1816152843_n

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை, கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான மாந்திரீக பூஜைகளை செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் விமான நிலையத்திற்கு தனது சீடர்கள் சகிதமாக வந்த போமோ, கையில் இரண்டு இளநீர், மூங்கில் தொலைநோக்கிகள், விரிப்பு என சிலவற்றை வதைத்து கொண்டு நடத்தியுள்ள இந்த பூஜையை அங்கிருந்த ஒட்டுமொத்த ஊடகங்களும் பதிவு செய்துள்ளன.

இந்த மாந்திரீக பூஜையை செய்வதால், விமானத்தை அண்டியிருக்கும் தீய சக்திகள் அனைத்தும் விலகி காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க உதவும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Chong Sin Woonயார் உங்களை அழைத்தார்கள்?

போமோவின் இந்த மாதிரீக பூஜை குறித்து மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதை செய்ய உங்களை அழைத்த அந்த அம்னோ உயர்மட்டத் தலைவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் துறை அமைச்சரான ஜமீல் கிர் பாரோம் தான் அழைத்தார் என்று கூறப்படுவதை தாங்கள் விசாரணை செய்ததாகவும், அவர் போமோவை அழைக்கவில்லை என்றும் சின் தெரிவித்துள்ளார்.

போமோவை பூஜை செய்ய அழைத்த தலைவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் சின் குறிப்பிட்டார்.

“காணாமல் போன விமானம் குறித்து நல்ல எண்ணங்களுடன் செய்யப்படும் எல்லா விதமான பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால் மிது போன்ற சுய விளம்பரங்களுக்காக செய்யப்படும் பூஜைகள் உலக நாடுகளின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளது” என்று சின் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.