அப்போது அவருடன் காவல் துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர். இந்நிலையில் பலியான 15 பேரின் குடும்பத்தார், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் எம்.எஸ். திரவியம், கவிஞர் ஜோதிராமலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து டெல்லிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவே கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.