Home நாடு ‘போமோ ஒரே மலேசியா’ அனுமதி வழங்கியது யார்? – அன்வார்

‘போமோ ஒரே மலேசியா’ அனுமதி வழங்கியது யார்? – அன்வார்

471
0
SHARE
Ad

raja-bomoh-at-work-300x188கோலாலம்பூர், மார்ச் 13 – கேஎல்ஐஏ விமான நிலையத்தில் மாந்திரீக பூஜைகளை செய்ய போமோவிற்கு யார் அனுமதி அளித்தது என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அது கேஎல்ஐஏ விமான நிலையம். அங்கு பூஜைகள் செய்ய யார் அனுமதி வழங்கியது? மாஸ் நிறுவனமா? அல்லது உள்நாட்டு போக்குவரத்து இலாகாவா (டிசிஏ)?” என்று அன்வார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட மலேசியாவின் முட்டாள்தனங்களை கண்டு சிரிக்கும் அளவிற்கு கேலிக் கூத்தாகியுள்ளது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, போமோ தனது உடையில் குத்தியிருந்த ‘ஒரே மலேசியா’ சின்னத்தையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

இவரது சின்னத்தை அடிப்படையாக கொண்டு  ‘போமோ ஒரே மலேசியா’ என்று அழைக்கலாமா? என்றும் அன்வார் கூறினார்.

போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி) என்று அழைக்கப்படும் அவர், நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தனது சீடர்களுடன் வந்து, காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க சிறப்பு பூஜைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.