Home உலகம் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் – இலங்கை அரசு அறிவிப்பு!

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் – இலங்கை அரசு அறிவிப்பு!

445
0
SHARE
Ad

mandapam Fishers02கொழும்பு, மார்ச் 14 – ஒத்திவைக்கப்பட்ட தமிழக மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 25-ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இதனை தெரிவித்த இலங்கை  மீன்வளத்துறை தலைமை இயக்குநர் நிர்மல் எட்டியாராஜீ புதிய தேதி பற்றி தமிழக அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் இதை உறுதி செய்து தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றார் அவர். இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது பற்றி குறிப்பிட்ட அவர் அதில் பங்கேற்காதது குறித்து தமிழக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்று கூறினார்.

இதனிடையே சிறையிலிருந்த 172 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள இலங்கை அரசு முதல் கட்டமாக 116 பேரை நேற்று விடுதலை செய்தது. மேலும் தமிழக மீனவர்கள் 24 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 24 பேரையும் சேர்த்து விடுதலையான தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழக மீனவர்களின் 23 விசைப்படகுகளும், 3 நாட்டுபடகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மீதியுள்ள 32 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பிறகே இரு தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க தமிழக அரசு சம்மதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.