Home வாழ் நலம் உடல் நலம் காப்பதில் சிறந்தது வாழைப்பழம்!

உடல் நலம் காப்பதில் சிறந்தது வாழைப்பழம்!

513
0
SHARE
Ad

220மார்ச் 14 – பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. நெப்ரைடிஸ் என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது. உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும்.

மூளையில் செரோடினின்  உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.

#TamilSchoolmychoice

சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவுbanana2 வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது.

எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உப யோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.