Home நாடு “விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன்” – போமோ எச்சரிக்கை

“விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன்” – போமோ எச்சரிக்கை

402
0
SHARE
Ad

raja-bomoh-at-work-300x188கோலாலம்பூர், மார்ச் 14 – காணாமல் போன விமானத்தை தேடுவதாகக் கூறி கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தனது சிஷ்யர்களுடன் மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட போமோ, தான் இஸ்லாம் மதத்தில் இல்லாத முறைகளை செய்வதாகக் கூறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூஜையின் போது தான் உச்சரித்த வாக்கியங்கள் அனைத்தும் குரானில் உள்ளவை தான் என்றும், அது இஸ்லாமிற்கு உரியது தான் என்றும் போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி) கூறியதாக உத்துசான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பிரார்த்தனையின் போது தான் பயன்படுத்திய இரண்டு இளநீர், விரிப்பு போன்றவைகள் அனைத்தையும் பயன்படுத்தும் முறை மூதாதையர்கள் கொடுத்துச் சென்ற குறிப்புகள் தான் என்றும், அவை ஒரு அடையாளத்திற்கு தானே தவிர வழிபாட்டு பொருள் அல்ல என்றும் போமோ இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இஸ்லாமிற்கு முரண்பாடான பிரார்த்தனையை செய்ததாக மக்கள் என்னை எளிதில் குற்றம்சாட்டியுள்ளார். இனி அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றேன். மீறி செய்தால் முறைப்படி வழக்கு தொடுப்பேன்” என்று போமோ இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.