Home கலை உலகம் தேசிய விருது போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!

தேசிய விருது போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!

559
0
SHARE
Ad

Kollywood-news-8639சென்னை, மார்ச் 14 – கடந்த ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61-வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதிவரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது.

தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி,  ‘சூதுகவ்வும்‘ படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள ‘இனம்‘, ‘நெடுஞ்சாலை‘, ‘ராமானுஜம்‘ ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.