Home கலை உலகம் லட்சுமி மேனனைப் பற்றி பேசினால் கிரிக்கெட் மட்டையால் அடிப்பேன் – விஷால்!

லட்சுமி மேனனைப் பற்றி பேசினால் கிரிக்கெட் மட்டையால் அடிப்பேன் – விஷால்!

495
0
SHARE
Ad

Its-Lakshmi-Menon-for-Vishal-againசென்னை, மார்ச் 14 – நான் சிகப்பு மனிதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் அரங்கில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு, இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள லட்சுமி மேனனைப் பார்க்க நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன்.

ஆனால் கண்ணுலயே காட்டாம ஒளிச்சி வச்சிருக்கான் விஷால் என்றார். விஷால் பேசும்போது அதற்கு பதில் சொன்னார். லட்சுமி மேனன் சின்னப் பொண்ணு. வயதிற்கு மீறி தோற்றம் இருக்கு. அவரை மறைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

நிஜமாகவே என்னைப் பார்க்க விஷ்ணு வந்தபோது, அன்றைக்கு லட்சுமிக்கு படப்பிடிப்பு இல்லை. லட்சுமி மேனனை விஷ்ணு பார்க்காம இருக்கிறதுதான் அவனுக்கு நல்லது. இனி எங்காவது லட்சுமி மேனனைப் பற்றி பேசினால் கிரிக்கெட் மட்டையாலேயே அடிப்பேன்  என்று தன் நண்பன் விஷ்ணுவை அன்பாக எச்சரித்துள்ளார் விஷால்.