Home இந்தியா மதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அழகிரி!

மதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அழகிரி!

670
0
SHARE
Ad

vaiko-alakirமதுரை, மார்ச் 15 – திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி வரும் நாடாள்மன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாள்மன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. முடிவு செய்தது. இதற்கு எதிராக மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.

பிறந்தநாள் சுவரொட்டிகளில் ஒலித்த கழகக் குரலால் அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். கடைசியாக அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு சற்று அமைதியாக இருந்தார் அழகிரி. நாடாள்மன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதில் அழகிரிக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேட்டியளித்தார். கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும், அழகிரியும் சந்தித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இருவரும் மனம்விட்டு பேசினார்கள். அரை மணி நேரத்துக்கு மேலாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அழகிரி, நாடாள்மன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராவீர்கள் என்று வைகோவை வாழ்த்தியுள்ளார்.

அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக தானாகவே முன் வந்து தெரிவித்தார் என்று கூறினார்கள். அப்போது அழகிரி தனது 3 நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்க வேண்டும். அப்போது தான் ஆதரவு தொடர்பான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று அழகிரி கூறியதாக தெரிகிறது.

அவர் என்ன நிபந்தனைகள் விதித்தார் என்பதை வெளியிட பா.ஜ.க வட்டாரங்கள் மறுத்து விட்டனர். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 தொகுதிகளில் திமுக சார்பில் அறிவித்துள்ள வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் அழகிரி,

இந்த நான்கு தொகுதிகளில் மதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டால் அப்போது யாருக்கு ஆதரவாக அழகிரி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.