Home நாடு விமானம் மாயமானதற்கு நாச வேலை காரணமாக இருக்கலாம்!

விமானம் மாயமானதற்கு நாச வேலை காரணமாக இருக்கலாம்!

570
0
SHARE
Ad

MAS (1)மார்ச் 15 – மலேசிய விமானம் MH370 மாயமானதற்கு நாச வேலை தான் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரேடாரின் வழி சரியாகப் போய் கொண்டு இருந்த விமானம் தனது பாதையை மாற்றிக் கொண்டதற்கும், பின்னர் அதன் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதற்கும் நிச்சயம் சதி வேலை தான் காரணமாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புவதாக பிரபல வால் ஸ்ட்ரீட் ஜார்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விமானத்தில் உள்ள எஞ்சின் தொடர்ந்து தனது நிலை மற்றும் இயக்கம் குறித்து செயற்கைக் கோளுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும் என்றும், விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய நேரத்தில், வேண்டுமென்றே அதன் தொடர்பை துண்டித்ததாக செயற்கைக்கோளுக்கு தகவல் அனுப்பியுள்ளது என்றும் வால் ஸ்ட்ரீட் கூறுகின்றது.

#TamilSchoolmychoice

நிச்சயமாக, விமான தொழிநுட்பம் பற்றி நன்கு அறிந்த ஒருவரால் தான், இதை செய்திருக்க முடியும். அவர் விமானியாகக் கூட இருக்கலாம் என்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.