Home உலகம் அமெரிக்காவில் விமானச்சக்கரம் வெடித்தது – 154 பேர் உயிர் தப்பினர்!

அமெரிக்காவில் விமானச்சக்கரம் வெடித்தது – 154 பேர் உயிர் தப்பினர்!

443
0
SHARE
Ad

Emergency vehicles drive past a damaged US Airways jet at the end of a runway at the Philadelphia International Airport, Thursday, March 13, 2014, in Philadelphia. Airline officials said the flight was heading to Fort Lauderdale, Fla., when the pilot was forced to abort takeoff around 6:30 p.m., after the front landing gear failed. An airport spokeswoman said no injuries have been reported. (AP Photo/Matt Slocum)வாஷிங்டன், மார்ச் 15 – அமெரிக்காவில் உள்ள பிலாடில்பியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, புளோரிடாவுக்கு ‘ஏர்பஸ் ஏ–320’ விமானம் புறப்பட்டது. அதில் 154 பேர் இருந்தனர். ஓடுபாதையில் சென்ற போது விமானத்தின் முன்பக்க சக்கரம் திடீரென்று வெடித்தது.

அதன் காரணமாக முன்பகுதி தரையில் மோதியபடி தாறுமாறாக ஓடியது. பிறகு விமானி சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினர்.

இதனால் விமானத்தில் இருந்த 154 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 2 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice