Home இந்தியா ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைப்போம் – கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைப்போம் – கெஜ்ரிவால்!

507
0
SHARE
Ad

arvind_kejrivalபுதுடெல்லி, மார்ச் 15 – ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் விலை போன பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைப்போம்’’ என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த பேரணியில் பேசியதாவது,

தேர்தல் நேரத்தில் எல்லா ஊடகங்களும் விலை போய் விட்டன. இது மிகப்பெரிய சதியாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, விலைபோன பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைப்போம் என்றார்.

மேலும், பிரசாரத்தில் மோடியை முன்னிறுத்த மிகப்பெரிய தொகை ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக மோடி இங்கே இருக்கிறார். அங்கே இருக்கிறார். இதோ ராம ராஜ்யம் வந்துவிட்டது. ஊழல் எல்லாம் ஒழிந்து போகும் என்று ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

#TamilSchoolmychoice

குஜராத்தில் கடந்த 10 வருடத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அங்குள்ள நிறுவனத்திற்கு விவசாயிகள் ஒரு ரூபாய்க்கு கூட நிலங்களை விற்றுள்ளனர். இதையெல்லாம் எந்த தொலைக்கட்சிகளும், பத்திரிக்கைகளும் வெளியிடுவதில்லை என கெஜ்ரிவால் பேசினார்.