Home இந்தியா மக்கள் விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் – கெஜ்ரிவால்!

மக்கள் விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் – கெஜ்ரிவால்!

506
0
SHARE
Ad

1310kejriwal3பெங்களூர், மார்ச் 17 – வாரணாசி தொகுதி மக்கள் விரும்பினால், மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்  என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பெங்களூர் சுதந்திர பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது,

வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள நரேந்திர மோடிக்கு எதிராக என்னை போட்டியிட செய்ய ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. நானும் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். ஆனால், அத்தொகுதி மக்களின் கருத்தை கேட்டுதான் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

வரும் 23-ஆம் தேதி வாரணாசியில் கட்சி சார்பில் மாநாடு நடத்தி, மக்களின் விருப்பத்தை கேட்டு தெரிந்து கொள்ளவுள்ளேன். அவர்கள் என்ன கூறினாலும் அதை கேட்க தயாராகவுள்ளேன்.

#TamilSchoolmychoice

மோடிக்கு எதிராக போட்டியிடுவது மிகப்பெரிய சவால் என்பதை நான் உணர்ந்துள்ளேன். அரசியலில் ஆம் ஆத்மிக்கு பணமோ, அதிகாரமோ தேவையில்லை. நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ய வந்துள்ளோம். பகத்சிங்கை போல நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ய நேர்ந்தால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்வேன்.

நான் இங்கு வந்தது வெற்றி அல்லது தோல்வியை எதிர்பார்த்து கிடையாது. இங்கு வந்துள்ளது போராட்டத்திற்காக. நான் ஒரு சிறிய மனிதன். என்னிடம் எதுவும் கிடையாது. ஆள் பலமோ, பண பலமோ இல்லை. ஆனால், சாமானியர்கள் தேர்தலில் போராட வேண்டியது அவசியம் என கெஜ்ரிவால் பேசினார்.