அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற சுவரொட்டிகளில் கமல் சினிமா இயக்குநர் போன்றும், நடிகர் போன்றும் இருப்பது சுவரொட்டிகள் வெளியாகின. இதனால் இப்படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்ற குழப்பம் அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் ‘உத்தம வில்லன்’ படம் பற்றி படக்குழு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது, கமல்ஹாசன் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒன்று, 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘உத்தமன்’ என்ற கூத்துகலைஞர் வேடம், மற்றொன்று 21-ஆம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமான ‘மனோரஞ்சன்’.
இந்த இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை தான் உத்தம வில்லன். இவர்களுடன் மனோரஞ்சனை கண்டெடுத்து, நட்சத்திர அளவுக்கு உயர்த்திய குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின்
8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், முத்தரசன் என்ற 8-ஆம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள்.
கமலின் கதை-திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை கமலின் நண்பரும், பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்ய, லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.