Home கலை உலகம் முத்தமிடும் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு கவலை இல்லை- லட்சுமி மேனன்!

முத்தமிடும் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு கவலை இல்லை- லட்சுமி மேனன்!

701
0
SHARE
Ad

Vishal-and-lakshmi-menonசென்னை, மார்ச் 17 – கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்ற லட்சுமி மேனன், திரை உலகில் எல்லாவற்றையும் நன்மையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லட்சுமிமேனன் உதடுட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த லட்சுமி மேனன் ரசிகர்கள், குடும்பபாங்காக நடித்த இவர் இப்படி நடித்துள்ளேரே என்று ஆதங்கபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிமேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கபட்டது படத்தின் இயக்குநர் திரு இந்த காட்சி படத்தின் கதைக்கு  மிகவும் தேவைபடுவதால் அவசியம் நடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

#TamilSchoolmychoice

நானும் தொழில்முறையில் தான் இதை ஏற்றுக்கொண்டேன். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. நான் இது போன்ற காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை என கூறினார். என் வாழ்வில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.

திரை உலகில் நேர்மறையான எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டுதான் இருக்கும். இது போன்ற கருத்துகளை நாம் எடுத்துகொள்ள கூடாது எல்லாம் நன்மையாகவே எடுத்துகொண்டால் நல்லது என்று கூறினார்.