Home நாடு விமானம் மாயமானதில் அன்வாரை தொடர்பு படுத்துவது அபத்தம் – பிகேஆர்

விமானம் மாயமானதில் அன்வாரை தொடர்பு படுத்துவது அபத்தம் – பிகேஆர்

499
0
SHARE
Ad

MH 370 Zaharie 440 x 215கோலாலம்பூர், மார்ச் 17 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் மிகவும் அதிருப்தியடைந்த விமானி ஸஹாரி, MH370 விமானத்தை கடத்திச் சென்றிருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகேஆர் கட்சியின் தீவிர ஆதரவாளரான ஸஹாரி கடந்த அண்டு ஜனவரி 23 ஆம் தேதி அக்கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஆம் தேதி, மாலை அன்வாருக்கு ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த ஸகாரி கடும் ஆத்திரம் அடைந்தார் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 12.41 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட விமானத்திற்கு தலைமை விமானியாக செயல்பட்ட ஸகாரி, அதை கடத்தியிருக்கலாம் என்று அந்நாளிதழ் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த செய்தி அறிந்த பிகேஆர் தரப்பு  அதை முற்றிலும் மறுத்திருக்கிறது.

“ஸகாரி கடந்த ஆண்டு பிகேஆரில் இணைந்தது உண்மை தான். அதற்காக அன்வாரையும், விமானம் மாயமானதையும் தொடர்பு படுத்துவதா?” என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸகாரி ஒரு ‘அரசியல் வெறியர்’, அன்வாரின் ‘தீவிர ஆதரவாளர்’ என்று டெய்லி மெயில் குறிப்பிட்டிருப்பது குறித்து கருத்துரைத்த சிவராசா, டெய்லி மெயில் ஒரு சிறுபத்திரிக்கை, அடிப்படை ஆதாரங்கள் எதையும் மேற்கோள் காட்டாமல் செய்தி வெளியிடுகின்றது என்று சிவராசா குற்றம் சாட்டியுள்ளார்.