பெஷாவர், மார்ச் 17 – அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி பயங்கர தாக்குதலை நடத்தியவர் அல்கொயிதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன். பின்லேடனை கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிரடிப்படையினர் கொன்றனர்.
அவரை பிடிப்பதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஷகில் அப்ரிடி என்ற மருத்துவர் உதவியாக இருந்தார். ஆனால் ஷகில் அப்ரிடி, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்ததாக பாகிஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 33 ஆண்டுகள் சிறை தண்டனையை 22 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தார்.