Home நாடு MH370: பயணிகளில் ஒருவர் விமானத் தொழில்நுட்பம் அறிந்தவர்! காவல்துறை விசாரணை!

MH370: பயணிகளில் ஒருவர் விமானத் தொழில்நுட்பம் அறிந்தவர்! காவல்துறை விசாரணை!

612
0
SHARE
Ad

MAS (1)கோலாலம்பூர், மார்ச் 17 – மாயமான மாஸ் MH370 விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமானி உட்பட அதில் பயணித்த 239 பேரின் கல்விப் பின்னணி ஆராயப்பட்டு வருகின்றது.

பயணிகளின் விமானம் தொழில்நுட்பம் நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா என்பதை முன்வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், பயணிகளில் ஒருவரான முகமட் கைருல் அம்ரி சலாமட் (வயது) விமான தொழில்நுட்ப வல்லுநர் என்பதை அறிந்த மலேசிய காவல்துறை அவரைப் பற்றிய முழு விபரங்களையும் ஆராய்ந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

மலேசியரான கைருல், தான் தனியார் ஜெட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்திருப்பதாக நட்பு ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததை வைத்து இவ்விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.