Home வணிகம்/தொழில் நுட்பம் டொயோட்டாவின் இந்திய கிளைகளில் தற்காலிக உற்பத்தி நிறுத்தம்!

டொயோட்டாவின் இந்திய கிளைகளில் தற்காலிக உற்பத்தி நிறுத்தம்!

518
0
SHARE
Ad

toyoடோக்கியோ, மார்ச் 18 – ஜப்பானைத் தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இரண்டு இந்தியக் கிளைகள் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் கிளையில், ஃபார்ச்சுனர் மற்றும் இன்னோவா ரக கார்களும், கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டவது கிளையில், எடியோஸ், கொரோல்லா ஆல்டிஸ் போன்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஊதிய விகிதம் குறித்த சில முரண்பாடுகளினால், இந்த இரு பிரிவுகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் உற்பத்தியைப் புறக்கணித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மாநில அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயன்றும் நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் டொயோட்டா நிறுவனம், இரண்டு உற்பத்திப் பிரிவுகளிலும் நேற்று முதல் கதவடைப்பு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் பாதுகாப்பினைக் கருதி இந்த கதவடைப்பு செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக நாளொன்றுக்கு 700 வாகனங்கள் உற்பத்தி இழப்பீடு ஏற்படும் என்றும் டொயோட்டா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான நவோகி சுமினோ தெரிவித்தார். தொழிற்சங்கம் இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகான, பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, கடந்த 2012 ஆம் ஆண்டில் மனேசாரில் இயங்கிவந்த, ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனமும் தனது உற்பத்திப் பிரிவை ஒரு கலவரத்தினால் ஒரு மாதம் மூடியது. ஒருவர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த சம்பவத்தில் அந்நிறுவனத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.