Home நாடு ராடார் கண்காணிப்பிலிருந்து தப்ப MH 370 மிகவும் தாழ்வாகப் பறந்திருக்கலாம்!

ராடார் கண்காணிப்பிலிருந்து தப்ப MH 370 மிகவும் தாழ்வாகப் பறந்திருக்கலாம்!

457
0
SHARE
Ad

MAS MH 370 440 x 215மார்ச் 17 – காணாமல் போன மாஸ் விமானம், அதன் பாதையிலிருந்து திரும்பிய பிறகு ராடாரால் கண்காணிக்க முடியாத அளவுக்கு தாழ்வாக செலுத்தப்பட்டு உள்ளது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தரையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும், “டெர்ரெய்ன் மாஸ்கிங் (Terrain Masking) எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசிய ராணுவ ராடார்களுக்குத் (Radar)  தெரியாமல் அந்த விமானம் செலுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் மலேசிய அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

ராடார் என்பது பறந்து கொண்டிருக்கும் விமானத்தை படம் பிடித்துக் கண்காணிக்கும் தொழில் நுட்பக் கருவியாகும்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “விமானத்தை திசை திருப்பிச் செலுத்தியுள்ள நபர், விமானங்களைப் பற்றியும், விமானப் போக்குவரத்து பற்றியும் நிறைய நிபுணத்துவம் கொண்டவராக இருந்துள்ளார். அதனால்தான்,  விமானம் சென்ற சுவடே தெரியாமல் அவரால் அந்த விமானத்தை அவ்வளவு தூரம் செலுத்த முடிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விமானம் மிகத் தாழ்வாகப் பறந்து சென்று கிளந்தான் மாநிலத்தின் நிலப் பகுதியைக் கடந்துள்ளது உறுதியாகத் தெரிகிறது  என்று அதிகாரிகள் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழை மேற்கோள் காட்டி பல தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றனர்.

மேலும்,  ராடார் கண்காணிப்பிலிருந்து தப்புவதற்காக மலைகள் நிறைந்த பகுதிகள் வழியாக அது செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டதா அல்லது விபத்துக்குள்ளானதா?

மாயமான விமானம் குறித்து புலனாய்வு செய்து வரும்அதிகாரிகள் தற்போது இரண்டு முடிவுகளை நோக்கி நெருங்கி வந்துள்ளனர்.

ஒன்று, அது ரகசிய இடத்தில் தரையிறக்கப்பட்டு, அதன் இயந்திரங்கள் அணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது, எங்காவது மோதி வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம், அல்லது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்திருக்கலாம் என்ற முடிவுகளைத்தான் தங்களின் விசாரணைகள் காட்டுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.