Home வாழ் நலம் முட்டை சாப்பிட்டால் எடை குறையும்!

முட்டை சாப்பிட்டால் எடை குறையும்!

445
0
SHARE
Ad

25-eggமார்ச் 18 – அதிக புரதச்சத்து கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடத்தியது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரதச்சத்து கிடைக்கிறது.

அது உடலில் வலுவை நீடிக்கச் செய்து, நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

#TamilSchoolmychoice

அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது medimoon.com_தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உணவில் உயர்தர புரதச்சத்து சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது. குறிப்பாக, புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது.

காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது .