Home தொழில் நுட்பம் பல புதிய வசதிகளுடன் வாட்ஸ் அப்!

பல புதிய வசதிகளுடன் வாட்ஸ் அப்!

654
0
SHARE
Ad

whatsappமார்ச் 18 – இன்றைய சூழலில் உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் செயலியை (Whats App) 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய பின்னர் அச்செயலி மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கை விட சந்தையில் 5 மடங்கு வேகமாக வளர்ந்து வரும் வாட்ஸ் அப் செயலி, விண்டோஸ் திறன் பேசிகளுக்கென நவீன அம்சங்களைக் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். திறன் பேசிகள் போன்று விண்டோஸ் திறன் பேசிகளிலும் காணொளி மூலம் அழைத்தல் (video calling), தனிநபர் அல்லது குழு உரையாடல்கள் அமைத்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

உடனடி தகவல் வழங்குவதில், வாட்ஸ் அப் மற்ற செயலிகளைக் காட்டிலும் முன்னிலை வகிக்கின்றது.

இதே போன்ற சேவையை வழங்கும் தென் கொரியாவின் ககோ டாக் (KakaoTalk) மற்றும் சைப்ரஸ் நாட்டின் வைப்பர் (Viber) ஆகிய செயலிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் செயலியே.

மாதந்தோறும் ஏறத்தாழ 45 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். காணொளி மூலம் அழைத்தல் (video calling) வசதி தரப்படும் பட்சத்தில், பலர் வழக்கமான போன் சேவை நிறுவனங்களை ஒதுக்கித் தள்ளத் தொடங்கிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.