Home இந்தியா பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் – சீமான்!

பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் – சீமான்!

865
0
SHARE
Ad

Seeman-reel-5நெல்லை, மார்ச் 18 – நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அதேசமயம், ஜெயலலிதா பிரதமராக நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது, கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

அதேபோல், இந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய இருக்கிறோம். மேலும், 3வது அணி சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கும் என்று சீமான் கூறினார்.