Home உலகம் கிரிமியா விவகாரம்: ஜி8 லிருந்து ரஷ்யா நீக்கம்!

கிரிமியா விவகாரம்: ஜி8 லிருந்து ரஷ்யா நீக்கம்!

802
0
SHARE
Ad

G8மார்ச் 19 – கிரிமியா பகுதியில் நிலவும் அசாதாரண சுழலுக்கு ரஷ்யா தான் காரணமென்று மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பும், பொருளாதாரத் தடைகளும் விதித்து வருகின்றன.

இதன் திருப்பமாக, ரஷ்யாவை ஜி8 பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரெண்ட் பாபியஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள சோச்சியில் ஜுன் மாதம் நடைபெறுவதாக இருந்த ஜி8 மாநாட்டை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “மேற்கத்திய நாடுகள் கிரிமியா விவகாரத்தில் எல்லை மீறி நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.