Home தொழில் நுட்பம் பேஸ்புக் ‘Deepface’ தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது!

பேஸ்புக் ‘Deepface’ தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது!

542
0
SHARE
Ad

deepface (1)மார்ச் 19 – நட்பு ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் நிறுவனம், நித்தமும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக சமீபகாலமாக ஆராய்ச்சியில் இருந்த ‘Deep face’ எனும் முக சாயலை அடையாளம் கண்டு கொள்ளும்(Facial Recognition) தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

இந்த ‘Deepface’ தொழிநுட்பத்தின் மூலம் பல மில்லியன் படங்களைக் கொண்ட பேஸ்புக் தரவுத்தளத்திலிருந்து பயனர்கள் தங்கள் முக சாயல் கொண்ட வேறொரு பயனரை அறிந்துகொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், ஒருவர் தன்னை போலவே முக சாயல் கொண்ட மற்றொருவரின் படத்தை 97.25% அளவு துல்லியமாக கணிக்க முடியும்.

தற்பொழுது தானியங்கியாக இல்லாமல் இருக்கும் இந்த மென்பொருள்,விரைவில் தானியங்கியாக மாற்றப்பட இருக்கிறது.

பேஸ்புக் பயனர்கள் தங்களைப் போன்ற முகசாயல் கொண்டோரை விரைவில் பார்க்கக்கூடும்.