Home நாடு மலாக்காவில் எடிசன் திரைப்பட விருதளிப்பு விழா!

மலாக்காவில் எடிசன் திரைப்பட விருதளிப்பு விழா!

581
0
SHARE
Ad

unnamed (4)மலாக்கா, மார்ச் 19 – அண்மையில் தமிழ்நாட்டில் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு ‘எடிசன்’ விருதுகள் வழங்கப்பட்டது போல், மலேசியாவிலும் அது போன்ற ஒரு நிகழ்வை நடத்த எடிசன் விருது ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் இவ்விருதளிப்பு விழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வை மலேசிய சுற்றுலாத்துறையும், மலாக்கா மாநில அரசும், இந்திய சுற்றுலாத்துறையின் ஆதரவோடு வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இது குறித்து எடிசன் நிர்வாக இயக்குநர் ஜெ.செல்வக்குமார் கூறுகையில், “ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விழாவில் இந்திய கலை, கலாச்சாரம், பண்பாடு, இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நமது பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் இடம்பெறும். முதல் முறையாக நடத்தப்படும் இவ்விழாவில் மலேசியக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் இணைந்து நிகழ்ச்சிகள் படைப்பார்கள். இந்த மாபெரும் விழா மலாக்கா மாநிலத்திற்கு தனிச் சிறப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.unnamed (3)

மேலும், இவ்விழாவில், மலேசியாவில் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள், முழு நீளப்படங்கள் ஆகியவை திரையிடப்படும். சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கமளிக்கப்படும் என்றும் செல்வக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் தமிழ்நாட்டில் நடைபெற்ற எடிசன் திரைப்பட விருதளிப்பு விழாவில் மலாக்கா ஆளுநர் துன் முகமட் காலில் பின் யாக்கோப் கலந்து கொண்டார். அவருக்கு விருதளித்து கௌரவிக்கப்பட்டது.

unnamed (2)மலாக்காவின் சுற்றுலாத்துறையை மேலோங்கச் செய்யும் நோக்கத்தோடும், சிறந்த மலேசியக் கலைஞர்களை கௌரவிக்கும் எண்ணத்தோடும் மலாக்காவில் இவ்விழாவை நடத்த காலில் யாக்கோப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எம்.எஸ் மகாதேவன் கூறுகையில், இம்மாபெரும் நிகழ்வின் மூலமாக இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையே உள்ள நட்புறவு மேலும் வலுப்படும். பிரம்மாண்டமான இந்த விழாவின் மூலம் மலாக்காவின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ந்து தனிச்சிறப்புடன் திகழும் என்று தெரிவித்துள்ளார்.