Home கலை உலகம் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதில் அசின்!

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதில் அசின்!

714
0
SHARE
Ad

mani-ratnam-god-father-647x450சென்னை, மார்ச் 19 – மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக அசின் நடிப்பதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் தெலுங்கில் உருவாகவுள்ளது. இதில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார்.

இப்படம் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கவருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஐஸ்வர்யா நடிப்பதற்கு மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அதையும் மீறி மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்திருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.asin-beauty

#TamilSchoolmychoice

இதுபற்றி அவர் மணிரத்னத்திடம் ஆலோசனை செய்தார். கடைசிவரை காத்திருக்க தயாராக இருப்பதாக கூறினார் மணிரத்னம். இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசனை செய்தார் மணிரத்னம்.

தற்போது ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த வேடத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் இன்னும் அறிவிக்கவில்லை.