Home உலகம் சீனா ஆக்கிரமிப்பு: திபெத்தில் இரு புத்த துறவிகள் தீக்குளித்தனர்!

சீனா ஆக்கிரமிப்பு: திபெத்தில் இரு புத்த துறவிகள் தீக்குளித்தனர்!

602
0
SHARE
Ad

chinaதிபெத், மார்ச் 19 – திபெத் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செயல்களை செய்துவருகின்றது.

இதனை கண்டித்து திபெத்திலுள்ள புத்த துறவிகள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் சுமார் 120 திபெத்தியர்கள், திபெத் விடுதலைக்காக தங்கள் உயிரைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சிஷுயான் மாகாணத்திலுள்ள அபா நகரில் லோப்சாங் பல்டீன் என்ற புத்த துறவியும், குயிங்காய் மாகாணத்தில் மற்றொரு புத்த துறவியும்  தீக்குளித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“புத்த துறவிகளின் தீக்குளிப்பு போராட்டங்களை புத்தமத தலைவர் தலாய் லாமா ஊக்குவிக்கிறார்” என சீன ஊடகங்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.