Home தொழில் நுட்பம் விண்டோஸ் 8 ல் ‘மொஸில்லா பயர்பாக்ஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!

விண்டோஸ் 8 ல் ‘மொஸில்லா பயர்பாக்ஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!

510
0
SHARE
Ad

Windows 8 1மார்ச் 19 – விண்டோஸ் 8 கான பயர்பாக்ஸ் உருவாக்கத்தை மொஸில்லா (Mozila) நிறுவனம் நிறுத்திக் கொள்ளப் போகிறது என அதன் துணை தலைவர் ஜோனாதன் நைட்டிங்கேல் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

“மெட்ரோ இடைமுகத்திற்குப் பயனர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்காததாலும், குறைந்த வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாலும் விண்டோஸ் 8 கான பயர்பாக்ஸ் உலாவியின் உருவாக்கம் நிறுத்தப்படுகின்றது” என்று ஜோனாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “விண்டோஸ் 8 கான பயர்பாக்ஸ் உலாவியின் உருவாக்கத்தில் மொஸில்லா நிறுவனம் கணிசமான முதலீடு செய்தாலும், பயனர்கள் மத்தியில் அது குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.