Home உலகம் ரஷ்யா மீது ஜப்பான் பொருளாதாரத் தடை!

ரஷ்யா மீது ஜப்பான் பொருளாதாரத் தடை!

481
0
SHARE
Ad

18russia2ரஷ்யா,  மார்ச் 19 – கிரிமியாவை தன்னுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவின் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி அடைந்துதிருக்கும் இவ்வேளையில் ஜப்பான், ரஷ்யா மீது மென் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான விசா விதிமுறைகளைத் தளர்த்துவது, பொருளாதார முதலீடு, விண்வெளி ஆய்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்றவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பியுமியோ கிஷிடா கூறியதாவது, உக்ரைனிலிருந்து கிரிமியா பிரிவது அந்நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகும்.

கிரிமியா சுதந்திரம் பெற ரஷ்யா அங்கீகாரம் அளிப்பது உக்ரைனின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் குலைக்கும் செயலாகும் என்று தெரிவித்தார். எனினும் தனியார் நிறுவனங்களால் அரசின் ஆதரவு பெற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும், இரு நாடுகளுக்கிடையேயான முதலீட்டுக் கருத்தரங்கம் குறிப்பிட்டபடி நாளை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.