Home கலை உலகம் எனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா – ஜெயம் ரவி!

எனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா – ஜெயம் ரவி!

821
0
SHARE
Ad

santhosh_subramaniam1சென்னை, மார்ச் 19 – சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தை அடுத்து, ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதைபற்றி அவர் கூறியதாவது, பேராண்மை, ஆதி பகவன், நிமிர்ந்து நில் என சண்டை படங்களில் நடித்தும் காதல் நாயகன் என்ற பட்டம் தொடர்கிறதே என்கிறார்கள்.

காதல் வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பாவிட்டாலும் அந்த காதல் நாயகன் பட்டம் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அதை உடைக்கத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். காதல் நாயகன், சண்டை நாயகன் என இரண்டு வகை கதாபாத்திரத்திலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம்போல் இதுவும் காதல் கலந்த குடும்ப கதைதான். என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஜெனிலியாதான். பாகுபடு இல்லாத அவரது குணம் என்னை கவரும். இதனால் மற்ற நாயகிகள் கோபப்படுவார்கள் என்று பயப்படவில்லை என ஜெயம் ரவி கூறினார்.