Home நாடு கற்பழிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய புள்ளி விவரம் – ஜுனைடிக்கு எதிராக வலுக்கிறது கண்டனம்!

கற்பழிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய புள்ளி விவரம் – ஜுனைடிக்கு எதிராக வலுக்கிறது கண்டனம்!

745
0
SHARE
Ad

Datuk-Dr-Wan-Junaidi-Tuanku-Jaafarகோலாலம்பூர், மார்ச் 19 – நாடாளுமன்றத்தில் நேற்று, கடந்த ஆண்டில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக உள்துறை துணையமைச்சர் வான் ஜுனைடி கொடுத்த புள்ளி விபரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காரணம், பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் மலாய்க்காரர்கள் தான் முன்வந்து புகார்கள் அளிப்பதாகவும், மற்ற இனத்தவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை என்பது போலவும் ஜுனைடி தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் நடந்த 1,424 பாலியல் குற்றங்களில், அது தொடர்பாக 1,147 மலாய்க்காரர்களும், 62 சீனர்களும், 32 இந்தியர்களும் புகார் அளித்துள்ளனர். மீதமுள்ள 183 குற்றச்சாட்டுக்களை பிற இனத்தவர்கள் அளித்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜுனைடி புள்ளி விவரங்களுடன் பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் மலாய்க்காரர்களின் உணர்வுகளை மட்டுமே அதிகம் பாதித்துள்ளது என்றும், மற்ற இனங்கள் அதை பெரிதாகக் கருதாமல் உணர்வுகளற்ற நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது கருத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மசீச கண்டனம்

வான் ஜுனைடியின் அறிக்கை குறித்து இன்று கருத்துரைத்த மசீச தலைமைச் செயலாளர் ஓங்  கா  சுவான், வான் ஜுனைடி வெளியிட்ட புள்ளி விவரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர் தவறான கருத்தை தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

எனினும், அவர் கருத்தை கூற அவருக்கு உரிமை உண்டு என்பதால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓங் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக ஜசெக கட்சியைச் சேர்ந்த கூச்சிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சொங்  சியாங்  சென் கூறுகையில், தவறான கருத்தை வெளியிட்ட ஜுனைடி அதை திரும்பப் பெற வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.