Home வாழ் நலம் உடலை புத்துணர்ச்சியாக்கும் பிளம் பழம்!

உடலை புத்துணர்ச்சியாக்கும் பிளம் பழம்!

752
0
SHARE
Ad

plums_002மார்ச் 20 – மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம். நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும்  இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.

மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில  நேரங்களில் குறைவாகவும் காணப்படும்.

கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை  ஏற்படுத்திவிடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம் பழங்களை சாப்பிடலாம்.

ரத்தத்தை சுத்தப்படுத்த:

#TamilSchoolmychoice

ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்த சுத்தத்திற்கு பிளம்  பழங்களை சுவைக்கலாம். பிளம் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

ஜீரண சக்கியைத் தூண்ட:Red-Fresh-Plums

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து  சத்துக்களும் கிடைக்கும்.  தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

உடல் புத்துணர்ச்சிக்கு:
 

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும்  அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ்  பழத்தை சாப்பிடலாம். பிளம் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்.