Home கலை உலகம் லண்டனில் சமந்தா சிகிச்சை!

லண்டனில் சமந்தா சிகிச்சை!

578
0
SHARE
Ad

1samantha_1672021gசென்னை, மார்ச் 20 – சமந்தா லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இந்நிலையில் திடிரென தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர், சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.

அஜீத் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது. அஞ்சான் பட படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் படப்பிடிப்பில் விடுமுறை எடுத்துக்கொண்டு லண்டன் சென்றார். அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அவர் ரகசிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் சமந்தா.

சில விளம்பரங்களில் நடித்தார். லண்டன் புறப்படுவதற்கு முன் ரபாஷா தெலுங்கு பட படப்பிடிப்பில் சில நாட்கள் பங்கேற்று நடித்தார். விரைவில் அஞ்சான் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என செய்திகள் வெளியாகின.