அப்போது அவர் பேசியதாவது, வரும் நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். எனவே, தேசிய அளவில், காங்கிரஸ், -பாரதிய ஜனதா இடையே தான் போட்டி நிலவுகிறது.
இந்த இரு கட்சிகளையும் ஆதரிக்காத, தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகள், வேறு எந்த கட்சியை ஆதரிக்கப் போகிறது என்பது தான் புரியவில்லை. தேசிய அளவில், இந்த இரு மாநிலக் கட்சிகளுக்கும், ஆதரவு இல்லை.
சிவகங்கை தொகுதியில், மீண்டும் நான் போட்டியிடுவதாக நினைத்து, நீங்கள் அனைவரும், காங்கிரசுக்கு ஓட்டுப்போட வேண்டும் என ப.சிதம்பரம் பேசினார். வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையில், சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.