Home நாடு எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம் 96.75 % ஆக உயர்வு!

எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம் 96.75 % ஆக உயர்வு!

637
0
SHARE
Ad

STPM-results-keputusanகோலாலம்பூர், மார்ச் 20 – நேற்று வெளியான 2013 ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளில் 96.75 சதவிகிதம் (53,422) மாணவர்கள் 5 பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆண்டு மாணவர்களின் 92.67 சதவிகித தேர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்களில் 3.44 சதவிகிதம் (1,898 மாணவர்கள்) ஐந்து பாடங்களில் முழுதேர்ச்சியும், 17.60 சதவிகிதம் (9,717 மாணவர்கள்) மூன்று பாடங்களில் தேர்ச்சியும், 9.48 சதவிகிதம் (5,234 மாணவர்கள்) இரண்டு பாடங்களிலும், 6.90 சதவிகிதம் (3,810 மாணவர்கள்) ஒரு பாடத்தில் முழுத் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து மலேசியத் தேர்வு மன்றத் தலைவர் பேராசிரியர் டத்தோ முகமட் நோ டாலிமின் கூறுகையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது என்றும், ஐந்து, நான்கு பாடங்களில் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 34,661 ஆக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், நான்கு பாடத்திட்டங்களுக்கான மொத்த புள்ளி மதிப்பீடு (பிஎன்ஜிகே), 2012 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2.24 ல் இருந்து 2.55 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், 0.89 சதவிகிதம் (492 மாணவர்கள்) 4.00 பிஎன்ஜிகே பெற்றுள்ளனர் என்றும் மலேசியா துன் உசேன் பல்கலைக்கழக துணை வேந்தருமான முகமட் நோ டாலிமின் அறிவித்தார்.