Home நாடு தமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை!

தமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை!

1232
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடை நிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் கல்வி அமைச்சு எந்த ஒரு தடையையோ, பாரபட்சத்தையோ பார்க்கவில்லை என அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, மலேசிய நண்பன் நாளிதழில், தமிழ் மொழி ஏன் ஒதுக்கப்படுகிறது எனும் தலைப்பில் வெளியான கட்டுரைக்கு கல்வி அமைச்சு பதிலளித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அது குறிப்பிட்டிருந்தது. இடை நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி கூடுதல் பாடமாகப் போதிக்கப்படுகிறது எனவும், மலேசிய நண்பன் குறிப்பிட்ட மாதிரி, அப்பாடம் பள்ளிகளில் ஒதுக்கபடுகிறதென்றால், கடந்த 2018-ஆம் ஆண்டில், எஸ்பிஎம் தேர்வுக்காக தமிழ் மொழி பாடத்தை எடுத்தவர்களின் எண்ணிக்கை எப்படி உயர்ந்திருக்கும் என கல்வி அமைச்சு வினவியது.

#TamilSchoolmychoice

கடந்த 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பாடத்தினை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8,107-லிருந்து, 9,479-ஆக உயர்ந்துள்ளது என அது குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தினை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு 731-ஆக பதிவாகி இருந்தது. 2018-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 686 –ஆக குறைந்துள்ளது என அது தெரிவித்துள்ளது.