Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை

மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை

1160
0
SHARE
Ad

மைக்குரோசாப்டு மொழியாக்கம் ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கும் ஒரு செயலி (ஆப்). கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் இயங்கும் மைக்குரோசாப்டின் எல்லா செயலிகளிலும் மொழியாக்கம் என்று வந்தால், ஒரே கட்டமைப்புதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் செயலியிலும் அதே கட்டமைப்புதான்.

உங்கள் திறன்பேசியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வரி எப்படி இந்தச் செயலியில் தமிழில் வருகின்றதோ, அது போன்றே வெர்டு (Word), பவர் பாயிண்டு (PowerPoint), எக்செல் (Excel) போன்றக் கணினி செயலிகளிலும் வரும். அனைத்துச் செயலிகளிலும் ஒரே கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் வழி, அதிகமான மொழியாக்கங்களைச் சேகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவற்றின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மொழியாக்கங்களின் செம்மையும் அதிகரிக்கும்.

ஐ.ஓ.எசில் இயங்கும் இச்செயலி சில நாட்களுக்குமுன் பதிகை எண் 3.2.12-க்கு மேம்படுத்தப்பட்டது. இந்தப் பதிகையில், பயனர்கள் சிலகாலமாகக் குறைபாடாகச் சொல்லிவந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பார்வை குறைவாக உள்ளோருக்கான பயன்பாட்டில் எளிமை, உரையாடல்களில் எளிமை, ஆப்பிள் கடிகாரங்களில் அமைப்புகளை (செட்டிங்) கையாளுதல் போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

மைக்குரோசாப்டு மொழியாக்கம் : வணக்கம் எனும் சொல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில்…
#TamilSchoolmychoice

கூகுள் மொழிமாற்றச் செயலியில் உள்ள கூறுகளை இந்தச் செயலியிலும் காணலாம். விசைமுகத்தின் வழி வெற்றுரை (plain text) உள்ளீடு, குரல் வழி உள்ளீடு, காமிரா வழி உள்ளீடு ஆகிய உள்ளீடுகளின் வழிப் பெற்ற உரைகளை ஒரு மொழியில் இருந்து வேறுமொழிக்கு இரு செயலிகளும் மாற்றித் தருகின்றன. இரண்டுமே இலவசச் செயலிகள்!

வெற்றுரை மொழியாக்கத்தைப் பயன்படுத்த, கூகுள் செயலியைவிட மைக்குரோசாப்டு செயலி சற்று எளிமையாக உள்ளதுபோல் தொன்றுகிறது. காமிரா வழி உள்ளீட்டில் கூகுள் மைக்குரோசாப்டை மிஞ்சுகிறது. படம் காமிராவில் தோன்றும்போதே மொழியாக்கம் செய்ய முயற்சி செய்கிறது கூகுள். ஆனால் மைக்குரோசாப்டு மொழியாக்கம், படத்தை நகலெடுத்த (கிளிக் செய்த) பிறகே மொழியாக்கத்தைத் தொடங்குகிறது.

மொழியாக்கச் செம்மை வரிக்கு வரி வேறுபடுகிறது. சிலவேளைகளில் மைக்குரோசாப்டும் சில வேளைகளில் கூகுளும் மாறிமாறி வெற்றி பெறுகின்றன. முன்பு சொன்னதுபோல, பயன்பாடு அதிகரித்தால்தான் மொழியாக்கச் செம்மையும் அதிகரிக்கும்.

“I have not heard what you just told me” என்னும் ஆங்கில வரியை மைக்குரோசாப்டும் கூகுளும் வழங்கும் மொழியாக்கங்களைக் பின்வரும் படங்களில் காணலாம்:

மைக்குரோசாப்டு மொழியாக்கம்
கூகுள் மொழியாக்கம்

நன்றி – செல்லினம்