மார்ச் 20 – ஆஸ்திரேலிய கடற்பகுதி பாதுகாப்பு இலாகா இன்று காலை இந்தியப் பெருங்கடலுக்குத் தெற்கே கண்டுபிடித்த பாகங்கள் MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கடற்பகுதி பாதுகாப்பு இலாகாவின், அவசர நடவடிக்கைப் பிரிவின் தலைவர் ஜான் யங் இன்று மதியம் கேன்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், கண்டறிந்த பொருட்கள் MH370 விமானத்தின் பாகங்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் இது ஒரு முக்கிய தடயமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட அந்த பொருள் 24 மீட்டர் நீளம் கொண்டது என்றும், இன்னும் சில பொருட்களும் அங்கு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.