Home இந்தியா தமிழக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அதிமுக, திமுக, காங்கிரஸ்!

தமிழக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அதிமுக, திமுக, காங்கிரஸ்!

733
0
SHARE
Ad

27-admk-dmk-congress-600 (1)சென்னை, மார்ச் 21 – தமிழக அரசியலில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு முக்கியக் கட்சிகளான திமுக,அதிமுக, காங்கிரஸ் ஆகியவை சென்றுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. நடக்கவே முடியாதது என்று சொல்ல முடியாது. காரணம், பாஜக தலைமையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள புதிய கூட்டணி.

பாஜகவை விட்டு விடுங்கள். ஆனால் இவர்கள் சேருவார்களா என்று யாருமே கனவு கூட கண்டிராத பாமகவும், தேமுதிகவும், மதிமுகவும் ஒன்றாக கை கோர்த்துள்ளனர். இது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதேபோல கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சிறிய கட்சியாக இருக்கலாம். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கவனிப்புக்குரியதாக இருந்த சக்தி அது. நாளையே அத்தனை கொங்குநாடு கட்சிகளின் பிரிவுகளும் ஒன்று சேர்ந்து மறுபடியும் பழைய சக்தியாக மாறி நின்றால். நிற்காது என்று சொல்லவும் முடியாது.

#TamilSchoolmychoice

வட மாவட்டங்களில் அசைக்க முடியாத கட்சி பாமக. இப்போதும் அதற்கென்று ஒரு செல்வாக்கு உள்ளது. இன்று விஜயகாந்த்துக்கு அன்புமணி ராமதாஸ் பொன்னாடை போர்த்துகிறார். அன்புமணியும், சுதீஷும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி பேசுகின்றனர்.

இன்றைக்கு இது சந்தர்ப்பவாத சந்திப்பாக இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பாராத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இந்தக் கூட்டணி பெற்று விட்டால்,

குறிப்பாக வட மாவட்டங்களில் பெற்று விட்டால். தேமுதிகவும், பாமகவும் நிச்சயம் சட்டசபைத் தேர்தலில் கை கோர்த்து திமுக, அதிமுகவுக்கு பெரும் சவாலாக நிற்கும் என்பது உறுதி.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் சக்திகளை ஓரம் கட்ட இவர்களுக்கு இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காது. அந்த வாய்ப்பு வந்தால், நிச்சயம் இணையக் கூடிய வாய்ப்புகள் 200 மடங்கு பிரகாசமாகவுள்ளன.

அதற்கான முன்னோட்டமாக இவர்கள் நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்வார்கள் என்பதே அரசியல் தெரிந்தவர்களின் கருத்து.

பாஜக கூட்டணி என்று வெளியில் பார்க்கப்பட்டாலும் உண்மையில் திமுகவும், அதிமுகவும் பயப்பட வேண்டியது பாமக, தேமுதிக, மதிமுக பற்றி மட்டும்தான். மற்றவர்களை விட இவர்கள்தான் உண்மையில் திமுக, அதிமுகவுக்கு மிகவும் அபாயகரமானவர்கள்.

இவர்கள் சேர்ந்ததே பெரிய விஷயம். சேர்ந்த இவர்கள் நாளைக்கு வலுவாகி விட்டார்கள் என்றால், அதையே பயன்படுத்தி திமுக, அதிமுகவை விரட்டியடிக்க எந்த வகையான கூட்டணிக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் கண்டிப்பாக இறங்கிப் போவார்கள் என்பது உறுதி. யாருமே அதை மறுக்க முடியாது.

இன்று அமைந்துள்ள இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான சாதனையைச் செய்து விட்டாலே போதும், சட்டசபைத் 20-1395323015-bjp-alliance341134-600தேர்தலின்போது மீண்டும் இதே கூட்டணி அணி சேரும். அப்போது இருப்பதை விட கூடுதலாக நிறைய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அதை மறுக்கவே முடியாது.

ஒரு வேளை தேமுதிகவும் பாமகவும், மதிமுகவும் சேர்ந்து ஒரு புதுக் கூட்டணி அமைத்தால், அதாவது சட்டசபைத் தேர்தலுக்கு பாஜகவை தவிர்த்து விட்டு, கூடுதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இழுக்க முடியும்.

அதேபோல தலித் கட்சிகளையும் சேர்க்க முடியும். ஏன் திருமாவளவன் கூட வந்தாலும் வரலாம். கிருஷ்ணசாமியும் வரலாம். வர மாட்டார்கள் என்று கூற முடியாது. காரணம் இது அரசியல். இங்கு சாதனையை விட, கொள்கையை விட வெற்றிக்குத்தான் முக்கியத்துவம்.

இப்படி பல முக்கியமான அரசியல் கணக்குகளுக்கான பிள்ளையார் சுழியை தெரிந்தோ தெரியாமலோ பாஜக இன்று தனது தலைமையில் போட்டுள்ளது. இந்தக் கூட்டணி வென்றாலோ அல்லது வாக்கு வங்கியில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தினாலோ எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி புதிய சரித்திரத்தை எழுதும் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

ஆயிரம் விமர்சனங்கள், கிண்டல்கள் இருந்தாலும் கூட எதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூட்டணி நிச்சயம் இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் திமுக, அதிமுகவுக்கு பேராபத்து என்பதில் சந்தேகம் இல்லை.