Home கலை உலகம் புதிய தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி!

புதிய தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி!

595
0
SHARE
Ad

anjali-at-malabar-gold-showroom-stills010 (1)சென்னை, மார்ச் 23 – எங்கோ மாயமாகிவிட்டார் என்று கூறப்பட்ட நடிகை அஞ்சலி, புதிய தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தி கொடுமை என்று கூறிவிட்டு ஹைதராபாத் போய்விட்ட நடிகை அஞ்சலி அடிக்கடி ‘மாயமாகிக்’ கொண்டிருக்கிறார்.

குறிப்பாக சென்னைப் பக்கம் தப்பித் தவறிக் கூட வருவதில்லை என்று உறுதி பூண்டவர் போல உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவர் எங்கே? இருக்கிறார் என்ற தகவல் கூட யாருக்கும் தெரியாமல் போனது.

ஆந்திராவில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற அத்தனை பேரும் அஞ்சலி செல்பேசியை எடுக்கவில்லை என்றே தகவல் பரப்பினர். இந்த நிலையில் தான் மீண்டும் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஞ்சலி.

#TamilSchoolmychoice

தான் ஹைதராபாதில்தான் இருப்பதாகவும், விரைவில் புதிய படம் நடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றி தவறான செய்திகள் வருவதாகவும், நிறைய வாய்ப்புகள் வந்தும் நல்ல வேடம் வேண்டும் என்பதால் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

தான் அடுத்து நடிக்கும் படம் தெலுங்கில் தயாராவதாகவும், அதில் தன் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் என்பதால் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார். கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.

அதே நேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிப்பேன் என்றும், தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன்  என்றும் தெரிவித்தார் அஞ்சலி.