Home உலகம் கிரீமியா இணைப்புக்கு ரஷ்யா ஒப்புதல், உக்ரைனுக்கு ஜப்பான் 6000 கோடி நிதி!

கிரீமியா இணைப்புக்கு ரஷ்யா ஒப்புதல், உக்ரைனுக்கு ஜப்பான் 6000 கோடி நிதி!

544
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_26509821415மாஸ்கோ, மார்ச் 23 – ரஷ்யாவில் ஒருமையும், இறையாண்மையும் பாதிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்ததையடுத்து உக்ரைன் வீரர்கள் கிரீமியாவில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியேறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புடின் ஆதரவாளர்கள் சிலரின் வங்கி கணக்கு, சொத்துக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தடை விதித்தார். இதனால் ரஷ்ய பங்கு சந்தைகள் வெகுவாக சரிந்தன.

சுமார் 70 பில்லியன் டாலர் அளவுக்கு ரஷ்ய பங்கு சந்தையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரீமியா இணைப்புக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கையில் புடின் ஈடுபட வழியேற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,

ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதலாக விதித்துள்ள பொருளாதார தடைகள் கண்டனத்திற்குரியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா உறுதியாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் இது போன்ற நடவடிக்கை ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்கக் கூடியது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி சொய்கு, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் சக்ஷேகலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா எந்த ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு சுமார் ரூ. 6189 கோடி வழங்க போவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. தற்போது ஜப்பானும் சுமார் ரூ.6000 கோடி வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,

உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலையில் அமைதித் தீர்வை ஏற்படுத்தவும், அந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இது உதவும். அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றார்.

இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், ரஷியாவுக்கு எதிராக அதிபர் ஒபாமா விதித்துள்ள கூடுதல் பொருளாதாரத் தடை, ரஷ்யா மட்டுமின்றி உலகளவிலும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதன்மூலம், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வாய்ப்புள்ளது‘‘ என்று நம்பிக்கை தெரிவித்தார்.