Home கலை உலகம் முன்னணி கதாநாயகிகள்தான் வேணும் – அடம் பிடிக்கும் ஜீவா!

முன்னணி கதாநாயகிகள்தான் வேணும் – அடம் பிடிக்கும் ஜீவா!

515
0
SHARE
Ad

19-jeeva300சென்னை, மார்ச் 23 – கதை பிடித்தால் சில நாயகர்கள் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். சில நாயகர்கள் சம்பளம், இயக்குனர், போன்ற காரணங்களினால் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை.

இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான். தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை, எனக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக த்ரிஷா உடன் ஜோடி சேர வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டார். தன் ஆசையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிப்பார்த்தார். அவரது ஆசையை நிறைவேற்ற சில தயாரிப்பாளர்கள் த்ரிஷாவை அணுகியபோது, மார்க்கெட் இல்லாத ஜீவா உடன் நடிக்க முடியாது என்று மறுத்தார் த்ரிஷா.

#TamilSchoolmychoice

சில வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு மார்க்கெட் போனது. அதன் பிறகு என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா உடன் சேர்ந்து நடித்தார். தற்போது காஜல் அகர்வால், அனுஷ்கா, அமலாபால் என்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் ஜீவா.

உங்கள் படத்துக்கு உள்ள வியாபாரத்துக்கு நீங்கள் சொல்லும் நடிகைகளை எல்லாம் நடிக்க வைக்க முடியாது என்று தயங்கித் தயங்கி ஒரு தயாரிப்பாளர் சொன்னாராம். கடுப்பான ஜீவா, அப்படீன்னா சில வருஷம் காத்திருங்க.

என் மார்க்கெட் உயர்ந்ததும் நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். அப்ப படம் பண்ணலாம், இப்ப கிளம்புங்க. என்று அடிக்காத குறையாய் விரட்டினார ஜீவா.