Home அவசியம் படிக்க வேண்டியவை விமானம் திடீரென 12,000 அடிக்கு இறங்கியுள்ளது – சிஎன்என் புதிய தகவல்

விமானம் திடீரென 12,000 அடிக்கு இறங்கியுள்ளது – சிஎன்என் புதிய தகவல்

695
0
SHARE
Ad

mas-airbus-a380கோலாலம்பூர், மார்ச் 24 – மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை, 12.41 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு பெய்ஜிங்கை நோக்கிப் போய் கொண்டு இருந்த விமானம், சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு, மேற்குத் திசையை நோக்கி திடீரென திரும்பியுள்ளது என்று ஏற்கனவே விசாரணை அதிகாரிகளால் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அவ்வாறு திரும்பும் போது, சுமார் 4,000 மீட்டர் அல்லது 12,000 அடிக்கு விமானம் தடாலென கீழே இறங்கியுள்ளது என்ற புதிய தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு, விமானம் கீழே இறங்கியதற்குக் காரணம், அதை அவசரமாகத் தரையிறக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம் என்றும், விமானத்தில் போதுமான காற்று இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, விமானத்தின் கணினியில் திரும்பு திசை முன்பே திட்டமிடப்பட்டிருந்தது என்று கூறப்பட்ட தியரி தவறாகிறது.

துணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் கடைசியாக அதிகாலை 1.07 மணிக்கு  ‘ஆல்ரைட் குட்நைட்’ என்று சொன்ன பிறகு, விமானத்தில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சிஎன்என் கூறுகின்றது.

விமானம் மாயமாகி 17 நாட்கள் 

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமாகி இன்றோடு 17 நாட்கள் ஆகிவிட்டன.

மோசமான வானிலையிலும், மீட்புப் படையினரின் விமானங்களும், கப்பல்களும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளின் துணைக் கோள்கள், இந்தியப் பெருங்கடலில் மிதந்த விமானத்தின் பாகங்கள் என்று கூறப்படும் பொருட்களை படம்பிடித்து அனுப்பிய நிலையில், நேற்று பிரஞ்சு நாட்டு துணைக்கோளும் அத்தைகைய படம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இது தவிர, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விமானங்கள், கடலில் மிதந்த மரப் பெட்டகம் மற்றும் வார் பட்டை போன்ற பொருட்களைக் கண்டறிந்துள்ளன.

இதனால், ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் (Amsa), விமானத்தின் கார்கோவில் கொண்டு செல்லப்பட்ட மொத்த பொருட்களின் பட்டியலை வெளியிடும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.