Home கலை உலகம் சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன்!

சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன்!

1188
0
SHARE
Ad

Lakshmi-Menon-2சென்னை, மார்ச் 24 – நடிகை லட்சுமி மேனன், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘சிப்பாய்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கும் அவரது கதாபாத்திரம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ஒரு குழுவாக,

ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துவது போன்று அமைந்துள்ளது. படத்தின் ஆரம்ப காட்சியானது புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் குடித்தல் ஆகியவற்றிற்கு எதிராக பேரணி நடத்துவது போன்று தொடங்குகிறது.

இந்த காட்சியானது இரு மாதங்களுக்கு முன்பு படமாக்கப்பட்டுள்ளது.  மேடை நாடகம் போன்று நடத்தும் இதனை திறமையாக நடிப்பதற்காக லட்சுமி மேனன் கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த காட்சி நன்றாக வருவதற்காக 3 நாட்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.  அதனுடன் சமீபத்தில், நீர் நிலைகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் நோய் பாதிப்புகளை வலியுறுத்தும் விதமாக ஒரு காட்சி படமாக்கப்பட்டது.  கடலூர் செல்லும் வழியில் சிப்காட் அருகே இந்த காட்சியானது திறந்த வெளியில் படம் பிடிக்கப்பட்டது.