Home கலை உலகம் ரஜினிகாந்திற்காகவே கோச்சடையான் படத்தை ஒப்பு கொண்டேன் – தீபிகா படுகொனே!

ரஜினிகாந்திற்காகவே கோச்சடையான் படத்தை ஒப்பு கொண்டேன் – தீபிகா படுகொனே!

556
0
SHARE
Ad

23-1395552192-rajini-deepika4-600சென்னை, மார்ச் 24 – பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே கோச்சடையான் படத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.  படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது குறித்து அவர் கூறுகையில்,

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகியபோது, கதையம்சம், திரைக்கதை அல்லது என்னுடைய கதாபாத்திரம் ஆகிய எதனையும் கேட்காமல் உடனே நடிக்க ஒப்பு கொண்டேன்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடிப்பது என்பது தனக்கு மிக பெரிய கவுரவம் என்று கருதியதாலேயே நான் நடிப்பதற்கு ஒப்பு கொண்டேன்.  அவருடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே நான் உணர்ந்ந்தேன் எனக் கூறினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே.

#TamilSchoolmychoice

நடிகை தீபிகாவின் நடிப்பினாலேயே படம் தீர்மானிக்கப்படும் என்று பட குழுவினர் உணர்ந்துள்ளதாக தீபிகாவின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.  கோச்சடையான் படம் நாட்டின் முதல் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள படம்.

இந்த படத்தை இயக்கியுள்ளதன் வாயிலாக தனது முதல் இயக்குநர் பணியை சவுந்தர்யா தொடங்கியுள்ளார்.  நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.