Home உலகம் பாகிஸ்தானில் மலாலா, மிஸ்பாவுக்கு விருது!

பாகிஸ்தானில் மலாலா, மிஸ்பாவுக்கு விருது!

675
0
SHARE
Ad

malala (1)இஸ்லாமாபாத், மார்ச் 24 – பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 5 வெளிநாட்டினர் உள்பட 105 பேருக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு விருதுகள் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தலீபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய சிறுமி மலாலாவுக்கு சித்தாரா&ஐ&சுஜா விருதும், கிரிக்கெட் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கிற்கு அதிபர் விருதும் அறிவிக்கப்பட்டன.

மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட இளம் தொலைக்காட்சி நிருபர் வாலி கான் பாபருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று பாகிஸ்தான் நாள் கொண்டாடப்பட்டது.

#TamilSchoolmychoice

இதையட்டி நாடு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், மலாலா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதால், அங்குள்ள பாகிஸ்தான் அமைப்பினர் இந்த விருதை அவருக்கு வழங்குவர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.