Home உலகம் MH370: “எங்கள் உறவுகளைத் திருப்பிக் கொடுங்கள்” – பயணிகளின் உறவினர்கள் ஆர்பாட்டம்

MH370: “எங்கள் உறவுகளைத் திருப்பிக் கொடுங்கள்” – பயணிகளின் உறவினர்கள் ஆர்பாட்டம்

403
0
SHARE
Ad

mh370பெய்ஜிங், மார்ச் 25 – MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது என்பதை அறிந்த சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கம், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் மலேசிய இராணுவத்திற்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பிரதமர் நஜிப், விமானம் கடலில் விழுந்துவிட்டது என்று அறிவித்திருப்பது ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக உறவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த 18 நாட்களாக மலேசிய அரசாங்கமும், இராணுவமும், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனமும் உண்மையான நிலைமை என்னவென்று கூறாமல் மறைத்து வந்தார்கள். பயணிகளின் உறவினர்களை மட்டுமல்ல இந்த உலகத்தையும் முட்டாளாக்கியுள்ளார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசிய அரசாங்கத்தையும், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் “கொலைகாரர்கள்” என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், 154 சீனப் பயணிகளின் உறவினர்கள் சிலர் குழு ஒன்றை பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தப் போகவதாக அறிவித்துள்ளனர்.

“உண்மையை கூறுங்கள்… எங்கள் உறவினர்களைத் திருப்பித் தாருங்கள்” என்று அவர்கள் மலேசிய அரசாங்கத்தை கேட்கப் போவதாக கூறியுள்ளனர்.